Friday, 6 October 2017

ஸஹாபாக்களிடையே உண்டான கருத்து வேறுபாடுகள் குறித்து இமாமே ரப்பானி முஜத்திதே அல்பதானி رضي الله عنه அவர்கள் :

ஸஹாபாக்களிடையே உண்டான கருத்து வேறுபாடுகள் குறித்து இமாமே ரப்பானி முஜத்திதே அல்பதானி رضي الله عنه அவர்கள் :

இமாமே ரப்பானி ,முஜத்திதே அல்பதானி ஷெய்கு அஹ்மத் பாரூக்கி ஸிர்கந்தி رضي الله عنه அவர்கள் கூறுகின்றார்கள் :

நாயகம் ﷺ அவர்களின் தோழர் பெருமக்களான ஸஹாபாக்களிடையே உண்டான கருத்து வேறுபாடுகள் நப்ஸூடைய ஆசையினாலோ அல்லது தீய எண்ணத்தினாலோ அல்ல,ஏனெனில் அவர்களின் புண்ணிய ஆன்மா பரிசுத்தப்படுத்தப்பட்டு,தூய்மையாக்கப்பட்டு விட்டது .அப்பெருமக்கள் அம்மாரா என்னும் நிலையைக் கடந்து ,இம்தினான் என்னும் நிலையை அடைந்து விட்டனர். ஷரீயத்திற்கு கட்டுபடுவது மட்டுமே அவர்களின் ஒரே ஆசை.

அவர்களிடையே உண்டான கருத்து வேறுபாடுகள், அவர்களின் இஜ்திகாதே காரணம். அவர்களின் நோக்கம் எது சரி என்று கண்டுபிடிப்பது மட்டுமே.அல்லாஹ் ﷻ தவறான இஜ்திகாத் செய்தவர்களுக்கு ஒரு நன்மை கொடுப்பான். சரியான முறையில் இஜ்திகாத் செய்தவர்களுக்கு குறைந்த பட்சம் இரண்டு நன்மைகளேனும் கொடுப்பான்.

நாம் அத்தகைய பெருமக்களை நமது நாவினால் நோவினை செய்ய வேண்டாம். அவர்கள் ஒவ்வொரு வரையும் பற்றி நாம் நன்மையானவற்றை மட்டுமே குறிப்பிட வேண்டும்.

அஹ்லுஸ் ஸூன்னாவின் மாபெரும் இமாம்,இமாம்  ஷாபியீ رضي الله عنه அவர்கள் கூறுகின்றார்கள் :
" அல்லாஹ் ﷻ நமது கரங்களை ஸஹாபா பெருமக்களின் குருதியைக் கொண்டு களங்கப்படுத்தவில்லை,நாம் நமது நாவை அவ்வாறு களங்கப்படுத்த வேண்டாம் .

நாயகம் ﷺ அவர்களிம் மண்ணுலக மறைவிற்குப்பின் ,ஸஹாபா பெருமக்கள் ஆழ்ந்து யோசனை செய்தார்கள். ஸித்தீகுல் அக்பர் ஸெய்யிதினா அபூபக்கர் رضي الله عنه அவர்களைக் காட்டிலும் சிறந்தவர் யாரையும் அவர்கள் பூமியில் காணாத காரணத்தால் ,அன்னவரை கலீபாவாக நியமித தனர். அவர்களின் கீழ் சேவகம் செய்ய தயாராயினர்."

இமாம் ஷாபியீ رضي الله عنه அவர்களின் கூற்று,அமீருல் மூஃமினீன் ஹழ்ரத் அலி رضي الله عنه அவர்கள் மனமுவந்து ஸித்தீகுல் அக்பர் رضي الله عنه அவர்களின் கிலாபத்தை ஏற்றனர் என்பதும் அன்னார் ,பாசாங்கு செய்யவில்லை என்பதும் திண்ணமாக தெளிவாகின்றது .

( மக்தூபாத் இமாம் ரப்பானி,பாகம் 1, கடிதம் 80 )