Friday, 18 June 2021

தென்னிந்தியாவின் புகழ் மிக்க அரபிக்கலாசாலையின் ஆணித்தரமான மார்க்த் தீர்ப்பு

**தென்னிந்தியாவின்* *புகழ்** 
 *மிக்க* *அரபிக்கலாசாலை* 
 *யின் ஆணித்தரமான* 
           *மார்க்த் தீர்ப்பு* !
*****************************
 *வஹ்ஹாபிகள்* *வழிகெட்ட* 
 *வர்கள்! அவர்களைப்* பள்ளி
 *வாசல்களில்* *அனுமதிக்கா* 
 *தீர்!!* 
 *----------------------------------------* 

கலீபதுல் காதிரி, மௌலவி. பாஸில், ஷெய்கு
 *ஏ. எல் பதுறுத்தீன்* ஸூபி (ஷர்க்கி  பரேலவி)                                                            
 *.---------------------------------* 

இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நிலை நிறுத்துவ
தாக வரிந்து கட்டிக்கொ
ண்டு, சமுதாயத்தில் புதுப்பு
து குழப்பங்களை விளைவி
த்து வரும் ஒரு புதுக் கூட்ட
த்தினரைக் குறித்து தஞ்சை மாட்ட ஜமாஅத்துல் உலமா அண்மையில் இவர்கள் வழி
கெட்டவர்கள், வழிகெடுப்ப
வர்கள் என்ற தீர்மானத்தை
 நிறைவேற்றியது.ஆனால்,

 ஏற்கனவே இந்திய பெரு
நாட்டின் தலைசிறந்த, பழமையான, புகழ்மிக்க ஒரு கலாசாலை இக்கூட்ட
த்தினரைக் குறித்து மிகத்
தெளிவான, துணிவான மார்க்கத் தீர்ப்பு ஒன்றினை வெளியிட்டு இவர்களைத் தோலுரித்துக் காட்டியுள்ள
து.

ஹைதராபாத் நகரில் அமைந்துள்ள புகழ்மிகு கலாசாலையான ஜாமிஆ நிஜாமிய்யாவிற்கு,

 “நாங்களே ஹதீஸின்படி அமல் செய்பவர்கள் என்று கூறிக் கொள்ளும் ஒரு கூட்டத்தினர் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையைச் சார்ந்த
வர்களா? 

 73 பிரிவினரில் எந்தப் பிரிவிற்கு அஹ்லுஸ் ஸுன்
னத் வல் ஜமாஅத் என்று சொல்லலாம்?

 அஹ்லுல் ஹதீஸ்கள் எனக் கூறிக்கொள்கின்ற

 வஹ்ஹாபிகள் தாங்களே சுன்னத் வல் ஜமாஅத்தினர் என்று வாதிக்கின்றனர்.

 இவர்களது வாதம் சரியா
னதா? பள்ளிவாசல்களில் இவர்களது நோக்கப்படி தொழ அனுமதிக்கலாமா?“

 இவ்வாறு ஹிஜ்ரி 1329இல் பத்வா - மார்க்கத் தீர்ப்பு வேண்டி கேள்வியொன்று வந்தது.


இந்தக் கேள்விக்கு ஜாமிஆ நிஜாமிய்யாவின் முப்தி முஹம்மது ருக்னுத்தீன் சாஹிப் அவர்கள் வழங்கிய தீர்ப்பினைக் கீழே தந்துள்
ளோம். 

(கேள்வியும், பதிலும் ஜாமிஆ நிஜாமிய்யாவின் பத்வா தொகுப்பு நூலான பதாவா நிஜாமிய்யா, பாகம் - 02, பக்கம் - 196 - 200இல் காணலாம்)

பதில் ;

உங்கள் மீது எனது சுன்ன
த்தையும், நேர்வழி பெற்ற கலீபாக்களின் வழிமுறை
யையும் பின்பற்றுவது கடமை. அதனைப் பற்றிப் பிடித்து, உங்களது கடைவா
ய் பற்களினால் இறுகப் பிடி
த்துக் கொள்ளுங்கள் என்ற
 நபி மொழி புகாரியிலும், முஸ்லிமிலும் பதிவாகி உள்ளது. 

இந்த நபிமொழி மூலம் ஒவ்வொரு முஸ்லிமும் அண்ணல் நபி ஸல்லல்லா
ஹு அலைஹிவஸல்லம் அவர்களுடையவும், நேர்வ
ழி சென்ற கலீபாக்களுடை
யவும் நடைமுறைகளைப் பின்பற்றியொழுகுவது கடமையாகும்.

மேலும், திர்மிதி எனும் நபிமொழி தொகுப்பில் வரும் ஆதாரபூர்வமான  நபிமொழியான

 “எனது சமுதாயம் வழிகே
ட்டில் ஒன்று சேராது. அல்லாஹ்வின் கரம் உதவி ஜமாஅத் மீதே! (ஜமாஅத்தை விட்டு) தனித்தவன் நரகில் சேருவான்“

 என்ற நபிமொழி மூலம்,
 எந்த வழியில் அண்ணலா
ரின் அருமைச் சமுதாயம் ஒன்று சேர்ந்திருக்கிறதோ அதுவே உண்மையான சத்தியமான நேரான வழி.

 மேலும், ஜமாஅத்தின் மீதுதான் அல்லாஹ்வின் உதவியும் இருக்கிறது.

 எந்தக் கூட்டத்தினர் ஜமா
அத்தை விட்டுத் தனித்து நிற்கின்றதோ அது நரகி
ற்குரியது.

 இன்னொரு நபிமொழியில்

 பெரும் கூட்டத்தைப் பின்ப
ற்றும்படியும் ஆணை வந்து
ள்ளது.

மேலே எடுத்துக் காட்டப்பெ
ற்ற முதல் நபிமொழியில்,

 சுன்னத்துகளைப் பின்ப
ற்றுமாறும் ,இரண்டாவது நபிமொழியில் பெருங் கூட்
டத்தைப் பின்பற்றி அவர்க
ளோடு இணைந்திக்கும்
படியும் ஆணை வந்துள்ளது.

தற்போது ஹனபீ, மாலிகீ, ஷாபிஈ, ஹம்பலீ ஆகிய நான்கு மத்ஹபுகளின் மீது சமுதாயத்தின் இஜ்மாஃ ஏற்பட்டுள்ளது.

. ஒவ்வொரு மத்ஹபின் மார்க்க அறிஞர்களும், பிற மத்ஹபுகளும் சத்தியத்தில் இருப்பதாக பத்வா கொடு
த்துள்ளனர்.

 இவைதான் பெருங் கூட்டம். இவற்றுக்கு முழுமையான பெயர் "அஹ்லுஸ் ஸுன்ன த் வல் ஜமாஅத்."

அத்தஹ்ரீ எனும் நூலில் காணப்படுவதாக இஷ்பாஹ் நழாயிர் எனும் நூற்களில் பின்வருமாறு வருகின்றது.

 நான்கு இமாம்களுக்கும் மாறு செய்பவர், இஜ்மா
வுக்கு மாறு செய்பவராவார். நான்கு மத்ஹபுகளும் ஒழு
ங்குபடுத்தப்பட்டு இருப்ப
தாலும், இந்நான்கினைப் பி்ன்பற்றுவோரே அதிகமா
க இருப்பதாலும் இந்நான்
கைத் தவிர வேறு மத்ஹபுக
ளின்படி அமல் செய்தல் கூடாது.


“நான்கு மத்ஹபுகளை பி்ன்பற்றுவதின் மீது இஜ்மாஃ ஏற்பட்டுவிட்டது. அவர்களுக்கு மாறாக புதிதாகத் தோன்றிய முஜ்த
ஹிதுகளைப் பின்பற்றுதல் கூடாது“ என்று தப்ஸீர் அஹ்மது கூறுகிறது.

அல்லாமா இப்னு ஹஜர் ஹைத்தமீ ரஹ்மத்துல்லா
ஹி அலைஹி அவர்கள் பத்ஹுல் முபீன் எனும் நூலில் எழுதுகின்றார்கள்.

 “இக்காலத்தில் இமாம் ஷாபிஈ, இமாம் மாலிக், இமாம் அபூஹனீபா, இமாம் அஹ்மது இப்னு ஹம்பல் ரழியல்லாஹு அன்ஹும் ஆகிய நால்வரைத் தவிர மற்றோரை பின்பற்றுவது கூடாது என எங்களது இமாம்கள் கூறுகி்ன்றனர்.

அல்லாமா இப்றாஹீம் இப்னு முர்ஸி ஸுர்ஹி மாலிகி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் புதூஹாத்து வஹ்பிய்யா எனும் நூலில் எழுதுகின்றா
ர்கள்,

இமாம் மாலிக், இமாம் அபூஹனீபா, இமாம் ஷாபிஈ, இமாம் அஹ்மது இப்னு ஹம்பல் ரழியல்லா
ஹு அன்ஹும் ஆகிய நால்
வரைத் தவிர மற்றவர்க
ளைப் பின்பற்றுதல் கூடாது. ஏனெனில் இவர்களது மத்ஹபுகளின் விதிகள் பிரபலமாக உள்ளன.

 இம்மத்ஹபுகளின் சட்டங்க
ளும், அதனைப் பின்பற்று
வோரின் சேவையும் நிலை
த்திருக்கிறது.

 ஒவ்வொன்றுக்கும் சட்ட நுணுக்கங்களை அவர்கள் எழுதி வைத்துள்ளனர்.

பதாவா ஷாமி பாகம் - 02, பக்கம் - 319இல்


 வஹ்ஹாபிகள்,காரிஜிய்
 யாக்கள் எனவும் இவர்கள் தம்மைத் தவிர ஏனைய முஸ்லிம்களை காபிர்கள் எனக்கருதி கொலையும், கொள்ளையும் புரிந்தனர் எனத் தெளிவாகக் காண
ப்படுகின்றது.

இந்த நவீன கொள்கையர் வழிகெட்ட காரிஜிய்யாக் கூட்டம் என இதிலிருந்து தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். 

எனவே, எந்த விதத்திலும் இவர்கள் அஹ்லுஸ் ஸுன்
னத் வல் ஜமாஅத்தினர் அல்
ல! என அல்லாமா ஷாமி 
அவர்கள், 

“இவர்களின் முதுகெலும்
பை  அல்லாஹ் உடைத்து, முஸ்லிம் வீரர்களுக்கு வெ
ற்றியைக் கொடுத்தான்“

 என்று கூறுவதிலிருந்து இவர்கள் முஸ்லிம்கள்தா
னா? என்பதே சந்தேகம்!

 இவ்வாறிருக்க, இவர்கள் தம்மைத்தாம் சுன்னத் ஜமா
அத்தினர் என்று கூறிக்கொ
ள்வது அபத்தமாகும்.

இவர்களைப் போன்றவர்க
ள் பள்ளிகளுக்கு வருவதா
ல், குழப்பமும் முஸ்லிம்களு
க்குத் தொல்லையும் ஏற்படு
மாயின் இவர்களை பள்ளிக
ளில் அனுமதிப்பது கூடாது என ஷரீஅத் கூறுகிறது.

 “வேதனை கொடுக்கும் அனைவரையும் அது நாவா
ல் ஆயினும் சரி - பள்ளியி
னுள் அனுமதிக்கக் கூடாது!

 துர்ருல் முக்தார், பக்கம் - 102, (பதிப்பு முஹம்மதி)

எனவே இவர்கள் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தி
ற்கு மாற்றமானவர்களாக இருப்பதாலும், வழிதவறிய கொள்கைகளைக் கொண்டி
ருப்பதாலும், இவர்களால் சுன்னத் வல் ஜமாஅத்தின
ருக்கு தொல்லைகள் ஏற்படு
வதாலும் இவர்களை பள்ளி
களில் அனுமதிக்காது தடுப்
பது சுன்னத் வல் ஜமாஅத்தி
னரின் கடமை.

 அல்லாஹ்வே மிக அறிந்த
வன்.

முஹம்மது ருக்னுத்தீன்.

 தாறுல் இப்தா, ஜாமிஆ நிஜாமிய்யா, ஹைதராபாத் (ஹிஜ்ரி 1329)

நன்றி : வஸீலா, 15.03.1987