Saturday, 7 October 2017

அமீருல் மூஃமினீன் ஹழ்ரத் அலி رضي الله عنه அவர்களுக்கும் ஹழ்ரத் அமீர் முஆவியா رضي الله عنه இடையில் தீர்ப்பளிக்கும் அதிகாரமளித்தது நீங்கள் யார் ?

அமீருல் மூஃமினீன் ஹழ்ரத் அலி رضي الله عنه அவர்களுக்கும் ஹழ்ரத் அமீர் முஆவியா رضي الله عنه இடையில்  தீர்ப்பளிக்கும் அதிகாரமளித்தது நீங்கள் யார் ?

ஹாபிழ் இப்னு அஸாகிர் رضي الله عنه அவர்கள் இமாம் அபூ ஜர்ராஹ் رضي الله عنه அவர்களிடமிருந்து அறிவிக்கின்றார்கள் : அவரிடம் ஒருவர் வந்து கூறினார் :إني أبغض معاوية: (நான் முஆவியா அவர்களை வெறுத்தேன்).அபூ ஹர்ராஹ் அவர்கள் ஏன் என்று வினவினர் . அந்த மனிதர் கூறினார் :لأنه قاتل علي:(ஏனெனில் அவர் ஹழ்ரத் அலி رضي الله عنه அவர்களுடன் போர் புரிந்தார்.).இமாம் அபூ ஜர்ராஹ் رضي الله عنه அவர்கள் கூறினார்கள் :ويحك! إن رب معاوية رحيم،وخصم معاوية  خصم رحيم،فأيش دخولك أنت بينهما رضي الله عنهما:(உமக்கு உண்டான கைசேதமே ! முஆவியாவின் இறைவன் கருணையாளன்,மற்றும் முஆவிஆவுக்கு எதிரில் இருந்து  களத்தில் போர் புரிந்தவர்<இமாம் அலி رضي الله عنه> கருணையாளர்.அவர்களுக்கு மத்தியில் நுழைவதற்கு நீர் யார்?). (`அல் அவாசிம் வல் கவாசிம்' - காழி அபூபக்கர் இப்னு அரபி மாலிகி ,அடிக்குறிப்பு  -முஹிப்புத்தீன் காதிப்,பக்கம்.163.).

WHO GIVE YOU THE AUTHORITY TO JUDGE BETWEEN HAZRAT ALI AND AMIR MU'AWIYYAH ? Hafiz Ibn Asakir narrated from Imam Abu Zar'ah that somebody said to him:إني أبغض معاوية: (I hated Mu'awiyyah).Abu Zar'ah said to him:لما؟:(Why ?).The man said:لأنه قاتل علي:(Because he fought Ali.).Abu Zar'ah said to the man:ويحك! إن رب معاوية رحيم،وخصم معاوية  خصم رحيم،فأيش دخولك أنت بينهما رضي الله عنهما:(Woe unto you! The Lord of Mu'awiyyah is a Merciful God,and the opponent of Mu'awiyyah<i.e. Imam Ali> is a merciful opponent.WHO ARE YOU TO ENTER BETWEEN THEM ?). (`Al-Awasim wal-Qawasim' of Qadi Abu Bakr Ibn Arabi Maliki,footnote by Muhibbuddin Khatib,pg.163.).

வழிகேடர்களின் கேள்விகள் -1

வழிகேடர்களின் பதிவு,போலி தரீக்காவாதிகள்

http://ebookcollectionsindia.blogspot.in/2017/09/first-muawiyah.html?m=1

வழிகேடர்களின் கேள்விகள் -1

சிறிய தந்தையார் ஹஜ்ரத் ஹம்ஜா(ரலி) அவர்களின் ரணத்திற்காக வஹ்ஷீ யை கண்ணுக்கு முன்னால் வராதே என்று கூறினார்களே... தன் ஈரக்குழை இமாம்கள் ஹஸன் ஹுஸைனாரின் ரணத்தை மறந்து முஆவியாவை ஏற்பார்களா?

பதில் :

மார்க்கம் அறியாத மூடர்களின் உளறல்கள் இவை. தமது மனோ இச்சையை வைத்து மார்க்கத்தை வளைக்கும் அறிவீனர்கள் இவர்கள்.

நாயகம் ﷺ அவர்கள் அவ்வாறு கூறியதன் காரணம் ,ஹழ்ரத் வஹ்ஷி رضي الله عنه அவர்களை காணும் போதெல்லாம் அவர் ,அவர்களின் சிறிய தந்தையார் ஸெய்யிதுஷ் ஷூஹதா ஹழ்ரத் ஹம்ஜா رضي الله عنه அவர்களின் ஷஹாதத்தை நினைவுபடுத்தியதால் ,மனவேதனையுற்றதால் தான்.

இது குறித்து பெரிதும் மன சஞ்சலம் அடைந்த ஹழ்ரத் வஹ்ஷி رضي الله عنه அவர்கள்,தாம் மாபாதக செயலை செய்ததை எண்ணி வருந்தி, நாயகம் ﷺ அவர்களிடம் 'என்னைப் போன்ற கொடும் பாவியை அல்லாஹ் ﷻ மன்னிப்பானா ?'  என்று வினவ , அப்பொழுது இறங்கிய வசனம் தான்

" என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக."
(39:53)

( ஆதாரம்- மதாரிஜூன் நுபுவ்வா,பாகம் 2, பக்கம் 302)

பின்னர் ஹழ்ரத் வஹ்ஷி رضي الله عنه அவர்கள் ஸித்தீகுல் அக்பர் رضي الله عنه அவர்களின் கிலாபத்தில் தம்மை நபி என்று தாவாச் செய்த பொய்யன் முஸைலமா கஸ்ஸாபுுக்கு எதிரான போரில் கலந்து கொண்டு அவனைக் கொன்றார்கள்.

அதன் பின் ஹழ்ரத் வஹ்ஷி رضي الله عنه அவர்கள் கூறினார்கள் " அறியாமைக் காலத்தில் மனிதரில் மிகச் சிறந்தவரைக் கொன்றேன்,அதற்குப் பகரமாக இஸ்லாத்தை தழுவிய பின் மனிதருல் மிகக் கொடியவனைக் கொன்றேன் "

அல்லாஹ் ﷻ நாயகம் ﷺ அவர்களின் பொருட்டால் ,அவர்களின் ஸஹாபா பெருமக்கள் அனைவரையும் நேசிக்கும் கூட்டத்தில் நம்மை ஆக்குவானாக ! اللهم آمين بجاه نبينا محمد صلى الله عليه وسلم

Friday, 6 October 2017

ஸஹாபாக்களிடையே உண்டான கருத்து வேறுபாடுகள் குறித்து இமாமே ரப்பானி முஜத்திதே அல்பதானி رضي الله عنه அவர்கள் :

ஸஹாபாக்களிடையே உண்டான கருத்து வேறுபாடுகள் குறித்து இமாமே ரப்பானி முஜத்திதே அல்பதானி رضي الله عنه அவர்கள் :

இமாமே ரப்பானி ,முஜத்திதே அல்பதானி ஷெய்கு அஹ்மத் பாரூக்கி ஸிர்கந்தி رضي الله عنه அவர்கள் கூறுகின்றார்கள் :

நாயகம் ﷺ அவர்களின் தோழர் பெருமக்களான ஸஹாபாக்களிடையே உண்டான கருத்து வேறுபாடுகள் நப்ஸூடைய ஆசையினாலோ அல்லது தீய எண்ணத்தினாலோ அல்ல,ஏனெனில் அவர்களின் புண்ணிய ஆன்மா பரிசுத்தப்படுத்தப்பட்டு,தூய்மையாக்கப்பட்டு விட்டது .அப்பெருமக்கள் அம்மாரா என்னும் நிலையைக் கடந்து ,இம்தினான் என்னும் நிலையை அடைந்து விட்டனர். ஷரீயத்திற்கு கட்டுபடுவது மட்டுமே அவர்களின் ஒரே ஆசை.

அவர்களிடையே உண்டான கருத்து வேறுபாடுகள், அவர்களின் இஜ்திகாதே காரணம். அவர்களின் நோக்கம் எது சரி என்று கண்டுபிடிப்பது மட்டுமே.அல்லாஹ் ﷻ தவறான இஜ்திகாத் செய்தவர்களுக்கு ஒரு நன்மை கொடுப்பான். சரியான முறையில் இஜ்திகாத் செய்தவர்களுக்கு குறைந்த பட்சம் இரண்டு நன்மைகளேனும் கொடுப்பான்.

நாம் அத்தகைய பெருமக்களை நமது நாவினால் நோவினை செய்ய வேண்டாம். அவர்கள் ஒவ்வொரு வரையும் பற்றி நாம் நன்மையானவற்றை மட்டுமே குறிப்பிட வேண்டும்.

அஹ்லுஸ் ஸூன்னாவின் மாபெரும் இமாம்,இமாம்  ஷாபியீ رضي الله عنه அவர்கள் கூறுகின்றார்கள் :
" அல்லாஹ் ﷻ நமது கரங்களை ஸஹாபா பெருமக்களின் குருதியைக் கொண்டு களங்கப்படுத்தவில்லை,நாம் நமது நாவை அவ்வாறு களங்கப்படுத்த வேண்டாம் .

நாயகம் ﷺ அவர்களிம் மண்ணுலக மறைவிற்குப்பின் ,ஸஹாபா பெருமக்கள் ஆழ்ந்து யோசனை செய்தார்கள். ஸித்தீகுல் அக்பர் ஸெய்யிதினா அபூபக்கர் رضي الله عنه அவர்களைக் காட்டிலும் சிறந்தவர் யாரையும் அவர்கள் பூமியில் காணாத காரணத்தால் ,அன்னவரை கலீபாவாக நியமித தனர். அவர்களின் கீழ் சேவகம் செய்ய தயாராயினர்."

இமாம் ஷாபியீ رضي الله عنه அவர்களின் கூற்று,அமீருல் மூஃமினீன் ஹழ்ரத் அலி رضي الله عنه அவர்கள் மனமுவந்து ஸித்தீகுல் அக்பர் رضي الله عنه அவர்களின் கிலாபத்தை ஏற்றனர் என்பதும் அன்னார் ,பாசாங்கு செய்யவில்லை என்பதும் திண்ணமாக தெளிவாகின்றது .

( மக்தூபாத் இமாம் ரப்பானி,பாகம் 1, கடிதம் 80 )

Wednesday, 4 October 2017

ஹழ்ரத் முஆவியா رضي الله عنه அவர்களைப் பற்றி அஹ்லுஸ் ஸூன்னாவின் நிலைப்பாடு :

ஹழ்ரத் முஆவியா رضي الله عنه அவர்களைப் பற்றி அஹ்லுஸ் ஸூன்னாவின் நிலைப்பாடு :

   சமீபகாலமாக தம்மை அஷ்அரீயாக்கள் என்று அழைத்துக் கொள்பவர்கள் அனேகம் பேர்,குறிப்பாக AICP அல்லது அஹ்பாஷ் என்றழைக்கபடுபவர்கள் இமாம் அபுல் ஹசன் அஷ்அரீ رضي الله عنه அவர்கள் ஸஹாபியே ரஸூல் ﷺ ஹழ்ரத் முஆவியா رضي الله عنه அவர்களையும்,உம்முல் மூஃமினீன் அன்னை ஆயிஷா رضي الله عنه அவர்களையும்,கிளர்ச்சியாளர்கள் என்றும் பாஸிக் என்றும் கூறியுள்ளதாக சொல்கின்றனர் . ஆனால் உண்மையில் இமாம் அபுல் ஹசன் அஷ்அரீ رضي الله عنه அவர்களின் மீது அப்துல்லா அல் ஹரரீ இந்த நிலைப்பாட்டைச் சாட்டுகின்றார் . ஆயினும் இது இமாம் அஷ்அரீ رضي الله عنه அவர்களின் மீது புனையப்பட்ட கூற்றாகும்.

அப்துல்லா அல் ஹரரீயின் ஆதரவாளர்களும்,ஷைகு நினோவியின் ஆதரவாளர்களும் ( ஷைகு முஹம்மது பின் யஹ்யா நினோவி தனிப்பட்ட முறையில் இவ்வாறான நிலைப்பாட்டை ஊக்குவிப்பதில்லை என்றாலும்) ,அவர்கள் அஹ்லுஸ் ஸூன்னாவின் ஜம்ஹூர் இஜ்மாவிற்கு மாற்றமான கருத்துகளை பரப்பி பித்னாவை உண்டாக்குகின்றனர்.

இமாம் தவ்தஜானி رضي الله عنه தமது ஷரஹில் ,முழு இஸ்லாமிய வரலாற்றில் ஹழ்ரத முஆவியா رضي الله عنه அவர்களை சபித்த அல்லது சபிப்பதற்கு அனுமதித்த ஒரு அஹ்லுஸ் ஸூன்னாவின் உலமா கூட இல்லை என்கின்றார்.

இமாம் அபுல் ஹசன் அஷ்அரீ رضي الله عنه அவர்கள் தமது மகாலத்தில் கூறுகின்றார்கள் :

" அஹ்லுஸ் ஸூன்னாவின் நிலைப்பாடு என்னவெனில் ஹழ்ரத் அமீருல் மூஃமினீன் அலி رضي الله عنه அவர்களது நிலைப்பாடே அன்னாருக்கும் ,ஹழ்ரத் முஆவியா رضي الله عنه அவர்களுக்கும் இடையே உண்டான வேறுபாடுகளில் சரியானது. இந்த வேற்றுமைகள் தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் அடிப்படையிலோ,அல்லது பதவி ஆசையின் பேரில் உண்டான சபலத்தின் அடிப்படையிலோ உண்டானதல்ல,மாறாக அவ்விரு ஸஹாபா பெருமக்களும் தங்களது இஜ்திஹாதை

செயல்படுத்தியதன் விளைவே ஆகும். ஹழ்ரத் முஆவியா رضي الله عنه அவர்களின் இஜ்திஹாத் இவ்விஷயத்தில் தவறாக ஆகிவிட்டபடியால் ,அன்னாருக்கு அதற்குரிய பலன் உண்டு. இந்த தவறான இஜ்திஹாதின் காரணமாக ஹழ்ரத் முஆவியா رضي الله عنه அவர்கள் பாவம் செய்து விட்டார்கள் என்பதல்ல.

அஹ்லுஸ் ஸூன்னாவின் நிலைப்பாடு தெளிவானதும்,நெறிமுறைபடுத்தப்பட்டதுமாகும். அஹ்பாஷ் அல்லது நினோவியின் மாணாக்கரை எதிர்பார்த்து அஹ்லுஸ் ஸூன்னாவின் நிலை இல்லை,ஏனெனில் அவர்கள் இல்லாமலே அஹ்லுஸ் ஸூன்னத் வல் ஜமாஅத் முழுமைப் பெற்றதாகும்.

அகீதா தஹவிய்யா :
    நாம் நாயகம் ﷺ அவர்களின் தோழர் பெருமக்களை நேசிக்கின்றோம். எனினும்,அவர்களில் ஒருவரை மட்டும் முன்னிலைப் படுத்தி அதி தீவிர நேசம் கொள்வது என்பது கிடையாது.இன்னும் அப்பெருமக்களில் ஒருவரையேனும் விட்டு தொடர்பறுந்து செல்வதுமில்லை.அவர்களை வெறுப்பவர்களை நாம் வெறுக்கின்றோம்,இன்னும் அப்பெருமக்களின் நற்பண்புகளையே நாம் குறிப்பிடுகின்றோம்.

அப்பெருமக்களை நேசிப்பது மார்க்கத்திற்கும்,ஈமானிற்கும்,ஆன்மீக உயர்விற்கும் அடிப்படையானது ,அவர்களை வெறுப்பது நம்பிக்கையற்றதும்,நயவஞ்சகம் ,தீவிரவாதமான பண்புகளுக்கும் இட்டுச் செல்லும்.

எவரெல்லாம் நாயகம் ﷺ அவர்களின் தோழர் பெருமக்கள்,அன்னாரின் பரிசுத்த குடும்பத்தினர் மற்றும் சங்கைமிகு மனைவிகள் ஆகியோரைப் பற்றி நல்லதையே உரைக்கின்றார்களோ ,அவர்கள் முனாபிக் தனத்தை விட்டும் விடுவிக்கப்பட்டவர் ஆவார். "

இமாம் இப்னு தஹீக் அல் இத் رحمتہ اللہ علیہ அவர்கள் கூறுகின்றார்கள் ;

" ஸஹாபா பெருமக்களிடையே உண்டான மோதல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் குறித்து சொல்லப்பட்டுள்ளவைகளில் சில புனைதலும்,பொய்களும் உள்ளன ,அவற்றிக்கெல்லாம் எந்த கவனமும் அளிக்க வேண்டியதில்லை. அவற்றில் உண்மையானவற்றை மிகச்சிறந்த முறையில் விளக்க வேண்டும்,ஏனெனில் அவர்களைப் பற்றி அல்லாஹ் ﷻ புகழ்ந்துள ளது குர்ஆனில் இறங்கியுள்ளது.

உறுதியாக நிறுவப்பட்டதையும்,நன்கு அறியப்பட்டதையும் சந்தேகமும்,கற்பனைகளும் நீக்கிவிட இயலாது. "

நான்கு மத்ஹபுகளின் இமாம்களில் ஒருவரான இமாம் மாலிக் இப்னு அனஸ் رضي الله عنه அவர்கள் கூறுகின்றார்கள் :

"நாயகம் ﷺ அவர்களின் தோழர் பெருமக்களில் யாராகிலும் ஒருவரை ( ஹழ்ரத் அபூபக்கர் رضي الله عنه,ஹழ்ரத் உமர் رضي الله عنه ஹழ்ரத் உஸ்மான் رضي الله عنه,ஹழ்ரத் முஆவியா رضي الله عنه,ஹழ்ரத் அம்ரிப்னுல் ஆஸ் رضي الله عنه ஆகியோரை)  நிந்தனை செய்கின்றவன்,அப்பெருமக்கள் தவறான வழிகாட்டுதலின் படியோ அல்லது நம்பிக்கையற்றோ இருந்தனர் என்று கூறினால் ,அவன் கொல்லப்பட வேண்டும் .அல்லது அவன் மக்கள் ஒருவரை ஒருவர் பழித்துக் கொள்வது போல் அப்பெருமக்களை பழித்தால் அவனுக்கு கடுமையான தண்டனை தர வேண்டும் .

குறிப்பு : ஸஹாபாக்களை பழிப்பவன் கொல்லப் பட வேண்டும் என்பது இமாம் மாலிக் رضي الله عنه அவர்களது நிலைப்பாடல்ல. காழியின் இஜ்திஹாதைப் பொருத்தே அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். "

இறுதியாக ,இமாம் காழி இயாழ். رضي الله عنه தமது அஷ் ஷிபாவின் இறுதி அத்தியாயத்தில் ஸஹாபாக்களை பழிப்பவர்களைப் பற்றி கூறுகின்றார்கள் " அத்தகையோர் ஒழுங்குபடுத்தப் படவேண்டும் "

நாயகம் ﷺ அவர்களை உண்மையாக  நேசிப்பவர்கள் அஹ்லே பைத்தினரையும்,ஸஹாபா பெருமக்கள் அனைவரையும் நேசித்தலே ,உண்மையான முஹப்பத்தின் அடையாளம். அதுவே ஸவாதே ஆஜம் எனப்படும் அஹ்லுஸ் ஸூன்னாவின் அகீதா.