Wednesday, 4 October 2017

ஹழ்ரத் முஆவியா رضي الله عنه அவர்களைப் பற்றி அஹ்லுஸ் ஸூன்னாவின் நிலைப்பாடு :

ஹழ்ரத் முஆவியா رضي الله عنه அவர்களைப் பற்றி அஹ்லுஸ் ஸூன்னாவின் நிலைப்பாடு :

   சமீபகாலமாக தம்மை அஷ்அரீயாக்கள் என்று அழைத்துக் கொள்பவர்கள் அனேகம் பேர்,குறிப்பாக AICP அல்லது அஹ்பாஷ் என்றழைக்கபடுபவர்கள் இமாம் அபுல் ஹசன் அஷ்அரீ رضي الله عنه அவர்கள் ஸஹாபியே ரஸூல் ﷺ ஹழ்ரத் முஆவியா رضي الله عنه அவர்களையும்,உம்முல் மூஃமினீன் அன்னை ஆயிஷா رضي الله عنه அவர்களையும்,கிளர்ச்சியாளர்கள் என்றும் பாஸிக் என்றும் கூறியுள்ளதாக சொல்கின்றனர் . ஆனால் உண்மையில் இமாம் அபுல் ஹசன் அஷ்அரீ رضي الله عنه அவர்களின் மீது அப்துல்லா அல் ஹரரீ இந்த நிலைப்பாட்டைச் சாட்டுகின்றார் . ஆயினும் இது இமாம் அஷ்அரீ رضي الله عنه அவர்களின் மீது புனையப்பட்ட கூற்றாகும்.

அப்துல்லா அல் ஹரரீயின் ஆதரவாளர்களும்,ஷைகு நினோவியின் ஆதரவாளர்களும் ( ஷைகு முஹம்மது பின் யஹ்யா நினோவி தனிப்பட்ட முறையில் இவ்வாறான நிலைப்பாட்டை ஊக்குவிப்பதில்லை என்றாலும்) ,அவர்கள் அஹ்லுஸ் ஸூன்னாவின் ஜம்ஹூர் இஜ்மாவிற்கு மாற்றமான கருத்துகளை பரப்பி பித்னாவை உண்டாக்குகின்றனர்.

இமாம் தவ்தஜானி رضي الله عنه தமது ஷரஹில் ,முழு இஸ்லாமிய வரலாற்றில் ஹழ்ரத முஆவியா رضي الله عنه அவர்களை சபித்த அல்லது சபிப்பதற்கு அனுமதித்த ஒரு அஹ்லுஸ் ஸூன்னாவின் உலமா கூட இல்லை என்கின்றார்.

இமாம் அபுல் ஹசன் அஷ்அரீ رضي الله عنه அவர்கள் தமது மகாலத்தில் கூறுகின்றார்கள் :

" அஹ்லுஸ் ஸூன்னாவின் நிலைப்பாடு என்னவெனில் ஹழ்ரத் அமீருல் மூஃமினீன் அலி رضي الله عنه அவர்களது நிலைப்பாடே அன்னாருக்கும் ,ஹழ்ரத் முஆவியா رضي الله عنه அவர்களுக்கும் இடையே உண்டான வேறுபாடுகளில் சரியானது. இந்த வேற்றுமைகள் தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் அடிப்படையிலோ,அல்லது பதவி ஆசையின் பேரில் உண்டான சபலத்தின் அடிப்படையிலோ உண்டானதல்ல,மாறாக அவ்விரு ஸஹாபா பெருமக்களும் தங்களது இஜ்திஹாதை

செயல்படுத்தியதன் விளைவே ஆகும். ஹழ்ரத் முஆவியா رضي الله عنه அவர்களின் இஜ்திஹாத் இவ்விஷயத்தில் தவறாக ஆகிவிட்டபடியால் ,அன்னாருக்கு அதற்குரிய பலன் உண்டு. இந்த தவறான இஜ்திஹாதின் காரணமாக ஹழ்ரத் முஆவியா رضي الله عنه அவர்கள் பாவம் செய்து விட்டார்கள் என்பதல்ல.

அஹ்லுஸ் ஸூன்னாவின் நிலைப்பாடு தெளிவானதும்,நெறிமுறைபடுத்தப்பட்டதுமாகும். அஹ்பாஷ் அல்லது நினோவியின் மாணாக்கரை எதிர்பார்த்து அஹ்லுஸ் ஸூன்னாவின் நிலை இல்லை,ஏனெனில் அவர்கள் இல்லாமலே அஹ்லுஸ் ஸூன்னத் வல் ஜமாஅத் முழுமைப் பெற்றதாகும்.

அகீதா தஹவிய்யா :
    நாம் நாயகம் ﷺ அவர்களின் தோழர் பெருமக்களை நேசிக்கின்றோம். எனினும்,அவர்களில் ஒருவரை மட்டும் முன்னிலைப் படுத்தி அதி தீவிர நேசம் கொள்வது என்பது கிடையாது.இன்னும் அப்பெருமக்களில் ஒருவரையேனும் விட்டு தொடர்பறுந்து செல்வதுமில்லை.அவர்களை வெறுப்பவர்களை நாம் வெறுக்கின்றோம்,இன்னும் அப்பெருமக்களின் நற்பண்புகளையே நாம் குறிப்பிடுகின்றோம்.

அப்பெருமக்களை நேசிப்பது மார்க்கத்திற்கும்,ஈமானிற்கும்,ஆன்மீக உயர்விற்கும் அடிப்படையானது ,அவர்களை வெறுப்பது நம்பிக்கையற்றதும்,நயவஞ்சகம் ,தீவிரவாதமான பண்புகளுக்கும் இட்டுச் செல்லும்.

எவரெல்லாம் நாயகம் ﷺ அவர்களின் தோழர் பெருமக்கள்,அன்னாரின் பரிசுத்த குடும்பத்தினர் மற்றும் சங்கைமிகு மனைவிகள் ஆகியோரைப் பற்றி நல்லதையே உரைக்கின்றார்களோ ,அவர்கள் முனாபிக் தனத்தை விட்டும் விடுவிக்கப்பட்டவர் ஆவார். "

இமாம் இப்னு தஹீக் அல் இத் رحمتہ اللہ علیہ அவர்கள் கூறுகின்றார்கள் ;

" ஸஹாபா பெருமக்களிடையே உண்டான மோதல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் குறித்து சொல்லப்பட்டுள்ளவைகளில் சில புனைதலும்,பொய்களும் உள்ளன ,அவற்றிக்கெல்லாம் எந்த கவனமும் அளிக்க வேண்டியதில்லை. அவற்றில் உண்மையானவற்றை மிகச்சிறந்த முறையில் விளக்க வேண்டும்,ஏனெனில் அவர்களைப் பற்றி அல்லாஹ் ﷻ புகழ்ந்துள ளது குர்ஆனில் இறங்கியுள்ளது.

உறுதியாக நிறுவப்பட்டதையும்,நன்கு அறியப்பட்டதையும் சந்தேகமும்,கற்பனைகளும் நீக்கிவிட இயலாது. "

நான்கு மத்ஹபுகளின் இமாம்களில் ஒருவரான இமாம் மாலிக் இப்னு அனஸ் رضي الله عنه அவர்கள் கூறுகின்றார்கள் :

"நாயகம் ﷺ அவர்களின் தோழர் பெருமக்களில் யாராகிலும் ஒருவரை ( ஹழ்ரத் அபூபக்கர் رضي الله عنه,ஹழ்ரத் உமர் رضي الله عنه ஹழ்ரத் உஸ்மான் رضي الله عنه,ஹழ்ரத் முஆவியா رضي الله عنه,ஹழ்ரத் அம்ரிப்னுல் ஆஸ் رضي الله عنه ஆகியோரை)  நிந்தனை செய்கின்றவன்,அப்பெருமக்கள் தவறான வழிகாட்டுதலின் படியோ அல்லது நம்பிக்கையற்றோ இருந்தனர் என்று கூறினால் ,அவன் கொல்லப்பட வேண்டும் .அல்லது அவன் மக்கள் ஒருவரை ஒருவர் பழித்துக் கொள்வது போல் அப்பெருமக்களை பழித்தால் அவனுக்கு கடுமையான தண்டனை தர வேண்டும் .

குறிப்பு : ஸஹாபாக்களை பழிப்பவன் கொல்லப் பட வேண்டும் என்பது இமாம் மாலிக் رضي الله عنه அவர்களது நிலைப்பாடல்ல. காழியின் இஜ்திஹாதைப் பொருத்தே அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். "

இறுதியாக ,இமாம் காழி இயாழ். رضي الله عنه தமது அஷ் ஷிபாவின் இறுதி அத்தியாயத்தில் ஸஹாபாக்களை பழிப்பவர்களைப் பற்றி கூறுகின்றார்கள் " அத்தகையோர் ஒழுங்குபடுத்தப் படவேண்டும் "

நாயகம் ﷺ அவர்களை உண்மையாக  நேசிப்பவர்கள் அஹ்லே பைத்தினரையும்,ஸஹாபா பெருமக்கள் அனைவரையும் நேசித்தலே ,உண்மையான முஹப்பத்தின் அடையாளம். அதுவே ஸவாதே ஆஜம் எனப்படும் அஹ்லுஸ் ஸூன்னாவின் அகீதா.