Tuesday, 26 September 2017

தப்தீலிகளின் வழிகேடு

தப்தீலிகளின் வழிகேடு :
  ஷைக் யூசுபுந் நபஹானி رضي الله عنه அவர்கள் தமது நூலான 'அஸலிப் அல் பாதியா' வில் கூறுகின்றார்கள் ," நான் இந்த நூலினை எழுதிய காரணம் என்னவெனில் ஷைத்தான் நமது காலத்தில் உள்ள அறிவீனர்களை அஹ்லுல் பைத்துகளின் நேசம் என்னும் பெயரில்,ஸஹாபா பெருமக்களை தவறாகப் பேசவும்,அவதூறு பரப்பும் அளவிற்கு வழிகெடுத்துள்ளான்.அஹ்லுஸ் ஸூன்னத் வல் ஜமாத்தின் உலமாப் பெருமக்கள் இவ்விரு ஸஹாபா பெருமக்களின் மீதும் ,இன்னும் அமீருல் மூஃமினீன் ஹழ்ரத் அலி رضي الله عنه அவர்களுக்கு எதிரான போரில் பங்கேற்ற ஏனைய ஸஹாபா பெருமக்களுக்கு ஆதரவாக நீதமாக நடக்கவில்லை என்று ஷைத்தான் அவர்களை ஏமாற்றிவிட்டான். இன்னும் அவர்களில் சிலர் வரம்பு மீறி குலபாயே ராஷிதீன்களை தாக்கவும் செய்கின்றனர்,குறிப்பாக அமீருல் மூஃமினீன் ஹழ்ரத் உதுமான் رضي الله عنه அவர்களை. இன்னும் அவர்கள் அமீருல் மூஃமினீன் ஹழ்ரத் அலி رضي الله عنه அவர்களை ஹழ்ரத் உதுமான் رضي الله عنه அவர்களை காட்டிலும் அந்தஸ்த்தில் உயர்வானதாக காட்டுவதோடு மட்டுமல்லாமல்,குலபாயே ராஷிதீன்கள் அனைவரைக் காட்டிலும் உயர்ந்த அந்தஸ்த்து உடையவராய் சித்தரிக்கின்றார்கள். இது அறியாமையும்,வெறித்தனமுமாகும் ".

(நூல் - அஸலிப் அல் பாதியா,பக்கம் 1)

THE DEVIATION OF THE TAFDILIS:

Shaykh Yusuf Nabhani رضي الله عنهsaid in `Asalib al-Badi'ah' that:`I wrote this book because the Devil has misled some of the ignorants of our time among the Ahlus Sunnah in the name of loving of the Ahlul Bayt to slander and speak ill about some of the Sahabah expecially Mu'awiyyah and Amr Ibn al-As because they went against the established Imam (Hazrat Ali).Those ignorant people are proud of their senseless criticism of those two (great people) and thinking that they are pleasing God and that they will be rewarded in this world and the next! The Devil decieve them into believing that the Scholars of Ahlus Sunnah are not fair in their defence of those two and other Sahabah who fought against Ali رضي الله عنه.Some of them even went too far as to attack the Righteous Caliphs expecially Hazrat Uthman رضي الله عنه.They even make him (i.e.Imam Ali) to be superior not only to him but also to all of them,and this is ignorance and fanaticism.'(`Asalib al-Badi'ah',pg.1).